தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர்.
இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி மணாலியில் படமாக்கப்பட்டது. அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் லெஜண்ட் சரவணன் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருகிறதாம். அப்போது இருவரும் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.