Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“சினிமாவில் தொடர ஆசை இல்லை” : லோகேஷ் கனகராஜ்

leo director lokesh kanagaraj shoking news viral

தமிழ் சினிமாவில் ஒரு பிரமிக்க வைக்கும் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருக்கும் இவர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட்டையில் அளித்திருக்கும் தகவல் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி படுத்தி வருகிறது. அதில் அவர், “நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை, 20 வருடம் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற ஐடியாவும் இல்லை, எனது இயக்கத்தில் 10 படங்களை இயக்கிவிட்டு சினிமாவில் இருந்து விலகிடுவேன்” என்று சிம்பிளாக கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

leo director lokesh kanagaraj shoking news viral
leo director lokesh kanagaraj shoking news viral