தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு தான் முதல் நாள் முதல் காட்சி வெளியானது.
இருந்தபோதிலும் முதல் நாள் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது லியோ திரைப்படம். உலகம் முழுவதும் 110 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் 27.63 கோடி ரூபாய், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 13.17 கோடி, கர்நாடகாவில் 11.26 கோடி ரூபாய் மற்றும் கேரளாவில் 10.49 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் திரைப்பயணத்தில் முதல் நாளில் நூறு கோடி வசூலை தாண்டிய மூன்றாவது திரைப்படமாக லியோ சாதனை படைத்துள்ளது.