கோலிவுடில் ரசிகர்கள் கொண்டாடும் இளைய தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. வரும் ஆயுத பூஜைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து பிரபலங்கள் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வரும் நிலையில் இப்படத்தில் வில்லனாக விஜய்யுடன் மோத இருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களின் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
#LEO – #SanjayDutt gearing up for a Faceoff with #ThalapathyVijay ..🔥 pic.twitter.com/2kykYtZx1e
— Laxmi Kanth (@iammoviebuff007) February 20, 2023