Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தை பின்னுக்குத் தள்ளிய லியோ. முழு விவரம் இதோ

leo movie latest details

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘லியோ’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் சில மணி நேரங்களில் 31 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதே, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. ‘லியோ’ படத்தின் டிரைலரை தொடர்ந்து ரசிகர்கள் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.”,