லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் நாளில் ரூ.140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டையலாக் ரைட்டர் ரத்னகுமார் ‘லியோ’ படத்தில் பார்த்திபன் கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை ரசிகர்கள் பலரும் இயக்குனர் பார்த்திபனை குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் பார்த்திபன் விஜய் மற்றும் லோகேஷ் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், \”Mr vijai +mr Lokesh combination-னில் பெயரளவிலாவது இடம் பெறுவது நன்று\” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
Your name has become famous Vithagare #parthiban #Leo @rparthiepan https://t.co/jeLev85Qyt
— Pradeep Rajkumar (@pradeepr1981) October 20, 2023