கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவ்வப்போது இப்படம் தொடர்பான அப்டேட்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வரும் வகையில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனனின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பிரபல நடிகர் சஞ்சய் தத் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை விமான நிலையத்தில் இருக்கும் சஞ்சய் தத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sanjay Dutt Join the sets of #LEO…🔥🔥#BloodySweet @actorvijay pic.twitter.com/JU17Fh3nD3
— Dhilip Focus (@DhilipFocus) March 10, 2023