தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது ஆந்திராவில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து விஜய் என் பிறந்தநாள் தினத்தில் நான் ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது. ஆனால் இந்த பாடல் முழுவதும் போதை அடிதடி உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இருப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன, இதன் காரணமாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து ஒரு முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பாடலில் இடம் பெறும் மது காட்சிகள் விஜய் வாயில் சிகரெட் இருக்கும் காட்சிகள் ஆகியவற்றை நீக்கி படத்தை ரிலீஸ் செய்யலாம் என ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
