தமிழ் சினிமாவில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய் உடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
காஷ்மீரை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது இப்படத்தின் புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலையாளத் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் சாந்தி மாயாதேவி லியோ படத்தில் இணைந்து இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை சாந்தி மாயாதேவி தனது சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து என குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Santhi Mayadevi, actress who works in Malayalam films. She clicked a photo with @Dir_Lokesh on the sets of #LEO ❤️🔥 #LeoFilm #BloodySweet @actorvijay pic.twitter.com/9evWwjCbeU
— Actor Vijay Team (@ActorVijayTeam) May 7, 2023