தளபதி விஜய் அவர்கள் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 67ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன்பு தரமான புரோமோவுடன் வெளியானது. அதில் இப்படத்திற்கான தலைப்பு “லியோ” என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ப்ரோமோவில் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு தெரிவித்திருந்தது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வரும் நிலையில் இந்த வீடியோ இதுவரை கடந்திருக்கும் பார்வையாளர்கள் குறித்த புதிய தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், ‘லியோ’ ப்ரோமோ வீடியோ இதுவரை 35 மில்லியன் பார்வையாளர்கள் கடந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
An ENORMOUS 1️⃣5️⃣ MILLION #BloodySweet hearts chanting #Leo Leo Leo! ❤️🔥💥❤️🔥
➡️ https://t.co/boebmbZSQa#Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @sonymusicindia#Thalapathy67TitleReveal #Thalapathy67 pic.twitter.com/64MD6YPA09
— Sony Music South (@SonyMusicSouth) February 4, 2023