Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ ஷூட்டிங் ஸ்பாட் கௌதம் மேனனின் பிறந்தநாள் புகைப்படம் வைரல்.!! தளபதி எங்கே ரசிகர்கள் கேள்வி.??

leo movie shooting spot celebration photo viral

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தீவிரமான கடும் குளிரில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படக்குழுவினர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய முன் தினம் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் இயக்குனர் கௌதம் மேனனின் பிறந்த நாளை படகுழுவினர் கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளனர். அதன் புகைப்படத்தை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் அப்புகைப்படத்தில் விஜய் இல்லாததால் சோகத்துடன் தளபதி எங்க? என்ற கேள்வியை கமெண்ட் மூலம் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.