தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க திரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முற்றிலுமாக முடிவு அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாக இனி தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
And it's a wrap for our @actorvijay portion! 🤜🤛
Thank you for making the second outing yet again a special one na! ❤️#Leo 🔥🧊 pic.twitter.com/t0lmM18CVt— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 10, 2023