Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தின் பிரமாண்ட பாடலை நிறைவு செய்த படக்குழு

leo movie song shoot latest update

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று லியோ. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக 2000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முக்கிய பாடலுக்கான படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாகவும், அதனை தொடர்ந்து படக்குழு கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான படப்பிடிப்பு ஒரு வாரம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.

leo movie song shoot latest update
leo movie song shoot latest update