தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்தது.
முதல் நாளில் 148.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்திய அளவிலான வசூல் இரண்டாம் நாளில் பாதியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 68 கோடி ரூபாய் வசூல் செய்ய இரண்டாம் நாளில் ரூ 34 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று முதல் தொடர் விடுமுறை என்பதால் வசூல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.