Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை சொல்லும் பாடம்?

சுஷாந்த் சிங் நடுந்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கஷ்டப்பட்டு ஹிந்தி திரையுலகில் தனக்கான ஒரு இடத்தை நிலையாக பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த பொழுதுகளில் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மும்பையில் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டுள்ளார்.  முன்னதாக அவர் கடும் மனஅழுத்ததில் இருந்துள்ளார்.  பாலிவுட் திரையுலகம் அவரை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தன்னுடன் ஒரு குடும்பம் போன்று பழகவில்லை என்று வேதனையில் இருந்துள்ளார்.  ரசிகர்களுடன் இயல்பாக பழகி வந்த ஒருவர், மிகவும் சாதுவான குணங்களுடன்,தனிமை விரும்பியாகவும் வாசிப்பதில் நாட்டம் மிக்கவராகவும் இருந்துள்ளார்.  AIEEE பரீட்சையில் ஏழாம் இடத்தில் சித்தி பெற்றுள்ளார்.  பரீட்சைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் அம்மா இறந்துள்ளார்.  இவர் இறப்பதற்கு முன்னர் இறுதியாக அவர் அம்மாவின் படத்துடன் தன்னுடைய படத்தினை சேர்த்து பதிவிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

அவரது ட்விட்டர் கணக்கின் cover pic ஆக இருப்பது பிரபலமான ஓவியர் வின்சென்ட் தனது தற்கொலைக்கு முதலில் வரைந்த இறுதி படம்.  இந்த படத்தை அந்த ஓவியர் தனது அறையில் இருந்து யன்னல் வழியாக பார்த்து கொண்டு வரைந்து விட்டு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடதக்கது.

இறுதியாக ஒரு ரசிகர் கேள்விக்கு பதிலளித்த சுஷாந்த் சிங் ராஜ்புட், இந்த படத்தில் நீங்கள் இறப்பது போன்று காட்சியுள்ளதால் நான் அதை பார்க்கமாட்டேன் என்று ரசிகர் கூற, அதற்கு பதிலளித்த அவர், நீங்கள் இதை பார்க்காவிட்டால், ”அவர்கள்” என்னை பாலிவுட்டில் இருந்தே தூக்கி எறிந்துவிடுவார்கள்,எனவே உங்களுக்கு பிடித்தால் கட்டாயம் தன் படத்தை பாருங்கள் என்று கேட்டிருந்தார்.  கேரள வெள்ள நிதி,நாகாலாந்து உதவி நிதி என்று கோடி ரூபாய்களை கொடுத்துள்ளார்.  தாராளமாக உதவும் குணம் உள்ள ஒருவர் என்பதுடன், அனைவருடமும் ஏற்ற இறக்கம் பாராமல் பழகி வந்துள்ளார்.

தோணி படத்தில் நடித்திருந்தார்,தோணி மகள் ஷிவாவுடன் செல்லமாக கொஞ்சி விளையாடும் சுஷாந்த் சிங் ராஜ்புத்
தனிமையில் அதிகம் புத்தகங்களை படிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
கைலாசா சென்று தியானம் செய்ய வேண்டும் என்பது அவரது வாழ்வின் ஒரு இலக்காக இருந்துள்ளது.
தோணி படத்தில் இறுதி காட்சி..தோணி போன்றே படத்தில் வாழ்ந்திருந்தார்.
சென்னை ஐபிஎல் அணிக்காக தனது ஆதரவை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய போது

இவ்வாறு வாழ்க்கையில் பல சாதனைகளை எட்டி பிடிக்க வேண்டியவர் ஏன் இவ்வாறு தற்கொலையில் தன் வாழ்வை அற்பமாக முடித்துகொண்டார்..?  நண்பர்கள் என்று யாரும் அவருக்கு இருக்கவில்லை, அதீத தனிமை விரும்பியாக இருந்திருக்கின்றார்.  பாலிவுட் சினிமா எதிர்காலம் குறித்து அச்சத்துடன் இருந்துள்ளார்.  தொடர்ந்த சினிமா சீண்டல்கள், உளவியல் தாக்குதல்களினால் தடுமாறி நிலைகுலைந்துள்ளார்.  தனது ஏக்கங்களை பகிர்ந்து கொள்ள சரியானவர்களோ, அல்லது அவரின் உணர்ச்சிகளுக்கான சரியான வடிகால்கள் கிடைக்கவில்லை. அல்லது அவரால் கண்டுபிடிக்கமுடியாமல் போயிருக்கின்றது.  அவர் வாழ்வை முடித்து கொள்ள தற்கொலை செய்யவில்லை.  தொடர்ந்து வந்த துன்பம் புறக்கணிப்பை முடித்து கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவர் அதீத தனிமைவிரும்பும் ஆற்றலால் அவரால் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியவில்லை, அதற்கான ஆட்களையும் வைத்திருக்க முடியவில்லை. எல்லாவற்றையும் முடியுமானவரை தனக்குள் போட்டுகொண்டுள்ளார், ஒரு எல்லை தாண்டியதும் அவரால் அதன் பின்னர் தொடர்வதை விரும்ப முடியாது போகும்.  அந்த வேளை அவருக்கு இருக்கும் ஒரே தெரிவாக தற்கொலையை தேர்ந்தெடுத்துள்ளார்.

இத்தனைக்கும் தற்கொலையை தாண்டி எவ்வாறு வாழ்வது என்ற படகதையில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.  உலகம் எவ்வளோ மாறிவிட்டதாக நாம் கருதி கொண்டாலும் உலகின் அத்தனை உயிருக்கும் பொதுவான ஒரே அடிப்படை, வலியது வாழும் என்ற காட்டு தத்துவம்தான்,  உடல் உள சமூக நோக்கில் வலியவர்கள் மட்டுமே இங்கு வாழலாம்.  மற்றவர்கள் தினம் தினம் சாவும் வேதனையும்தான், அவற்றுடன் பழகி நோய்கள் என்று சென்று அழிபவர்கள் ஒருபுறம் மறுபுறம் உயிரை மட்டும் கடைசிவரை கையில் பிடித்துகொண்டு வாழ்ந்து மடியும் மாந்தர்கள்.   மிகசிலர் இவ்வாறு உடனேயே முடிவு எடுத்து சென்றுவிடுகின்றனர். கிடைத்தற்கரிய பிறவி,அவ்வளவு சீக்கிரம் தூக்கி கொடுத்துவிட்டு போய்விட முடியாது, கூடாது.

இறுதி புகைப்படம்

சுஷாந்த் சிங் ராஜ்புத் இறுதி புகைப்படம்