நாம் இரவில் சில பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அது தீங்கை விளைவிக்கும்.
பொதுவாகவே அனைத்து பழங்களும் உடல் நலத்திற்கு நல்லது. ஆனால் சில பழங்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இரவு நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது நோய்களை ஏற்படுத்தி விடும்.
முதலாவதாக நாம் இரவில் சாப்பிட தவிர்க்க வேண்டிய பழம் ஆப்பிள். இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிட்டால் உடல்நல பிரச்சனை ஏற்படக்கூடும். ஏனெனில் இது செரிமான அமைப்புக்கு நல்லது கிடையாது. இது தூங்கும்போது அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
இரண்டாவதாக வாழைப்பழம். வாழைப்பழம் இரவில் சாப்பிட்டால் உடல் வெப்பநிலையை அதிகரித்து தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்பட்டு விடும்.
மூன்றாவதாக சப்போட்டா. சப்போட்டாவில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் உடலின் சர்க்கரை அளவையும் அதிகரித்து விடும் இதனால் தூக்கத்தில் பிரச்சனை ஏற்படும். எனவே நாம் இரவில் சப்போட்டா சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.
நாம் பழங்களை உண்ணுவது ஆரோக்கியமாக இருந்தாலும் சில பழங்களை இரவில் உண்ணுவது நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.