Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

எல்.ஜி.எம் திரை விமர்சனம்

lgm movie review

தாய் நதியாவுடன் வாழ்ந்து வரும் நாயகன் ஹரிஷ் கல்யாணும் நாயகி இவானாவும் இரண்டு வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இவர்களின் திருமணத்திற்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவிக்கிறார்கள். திருமண சம்பந்தம் பேசபோன இடத்தில், ஒரு பிரச்சினை வெடிக்கிறது. அதாவது, கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்கிறார். இதனால் திருமண பேச்சு நின்று போகிறது. ஆனாலும் ஹரிஷ் கல்யாணை விட மனசில்லாமல் மாமியார் நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் போலாம் என்று இவானா கேட்கிறார். ஹரிஷ் கல்யாணும் தாய் நதியாவை ஏமாற்றி அழைத்து செல்கிறார்.

இறுதியில் இந்த ட்ரிப் என்ன ஆனது? மாமியார் நதியாவுடன் மருமகள் இவானா ஒன்று சேர்ந்தாரா? ஹரிஷ் கல்யாண், இவானா திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகன் ஹரிஷ் கல்யாண் யதார்த்தமாக நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். முதல் பாதியில் காதலியா… தாயா… என்று வரும் காட்சியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகி இவானா துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். முகபாவனைகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். ஒரு ஐடியா சொல்லவா… என்று சொல்லும் போது ரசிகர்கள் உற்சாகம் அடைகிறார்கள். தாயாக வரும் நதியா, முதல் பாதியில் வயதான அம்மாவாகவும், இரண்டாம் பாதியில் இளம் வயது அம்மாவாகவும் காட்சியளிக்கிறார்.

ஒரு தாயின் உணர்வை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக நடனத்தில் அசத்தி இருக்கிறார். யோகிபாபுவின் காமெடி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. மிர்ச்சி விஜய் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார். திருமண வயதில் இருக்கும் பெண்கள் பயப்படும் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. முதல் பாதி ரசிக்க வைத்திருந்தாலும், இரண்டாம் பாதி சற்று ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதை படத்தை விட்டு விலகி செல்வதுபோல் இருக்கிறது. ரமேஷ் தமிழ்மணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். விஸ்வாஜித்தின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் எல்.ஜி.எம் – ரசிக்கலாம்.

lgm movie review
lgm movie review