Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் லிகர் படத்தின் டிரைலர்

Liger Movie Trailer Viral Video Update

தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் தான் விஜய் தேவர்கொண்டா. இவர் தற்போது “லிகர்” என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இதில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் விஜய் தேவர் கொண்டவுடன் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் அவர்கள் இணைந்து நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணி சர்மா பின்னணி இசை அமைத்த விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஐந்து
மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகப்பட்டு வருகிறது.

விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் இதனை வைரலாக்கி வருகின்றனர்.