தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜெயபிரகாஷ். இவருடைய மகன் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் லில்லி ராணி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
விஷ்ணு ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கிளாப்பின் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக செந்தில் கண்டையார் தயாரித்து வெளியிடுகிறார். பிரபல நடிகையையும் மன்மத ராசா பாடல் புகழ் சாயா சிங், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 23-ம் தேதி இந்த லில்லி ராணி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. திறமையான நடிப்பால் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் பிரபல நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்துக்கு ஜெர்வின் ஜோஸ்வா இசையமைக்க சிவதர்ஷன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். பெஸ்வாந்த் வெங்கடேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

lilly-rani movie september-23rd-release