தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மாதீவ் தாமஸ், மிஷ்கின் என பலர் இணைந்து நடித்துவரும் இந்த படத்தில் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தொடர்ந்து வீடியோக்கள் லீக்கான வண்ணம் இருந்து வருகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம் யாராவது சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்தால் முன்னறிவிப்பு இன்றி நீக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் இந்த சம்பவங்களை தடுக்க லோகேஷ் கனகராஜ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் இனி படக்குழுவினர் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது. சூட்டிங் முடிந்த பின்னரே செல்போனை பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதனை தீவிரமாக கண்காணிக்க தனி குழுவும் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.