Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் போட்ட பிளான். நோ சொன்ன விஜய். லியோ படம் குறித்து வெளியான தகவல்

lokesh-kanagaraj-about-leo movie promotions

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் தொடங்கிய நிலையில் அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முழுமையாக முடிவுக்கு வர உள்ளது.

அதேபோல் படத்தின் பிசினஸ் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இதன் காரணங்களால் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து லியோ படத்துக்கு ப்ரமோஷன் செய்யலாம் என பிளான் போட்டு அதை நேரடியாக விஜயிடமும் கேட்டுள்ளார்.

இது ஐடியாவை கேட்ட விஜய் கடுப்பாகி நான் சொல்லி உள்ளார். காரணம் லியோ படத்திற்காக அவர் எந்த ஒரு பேட்டியையும் கொடுக்க தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. பீஸ்ட் படத்திற்காக விஜய் பேட்டி கொடுத்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. அதுகூட இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என ஐடியா கொடுக்க இதற்கும் விஜய் நோ சொல்லி உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரை கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நடத்த வேண்டும் என விஜய் சொல்லி வருகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

lokesh-kanagaraj-about-leo movie promotions
lokesh-kanagaraj-about-leo movie promotions