தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரூபாய் 475 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதே சமயம் படத்தின் இரண்டாம் பாகம் இளவையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கார்த்தியின் ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோகேஷ் லியோ படம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை அது தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட விஷயம் என தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இரண்டாம் பாதி இழுவையாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. அதையும் நான் ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.