Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி67 படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வைரலாகும் தகவல்

Lokesh Kanagaraj Salary for Thalapathy67 Movie

தென்னிந்திய சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் யோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மூன்று படங்களிலே தன்னுடைய திறமையை நிலைநாட்டிய லோகேஷ் கனகராஜ் நான்காவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து இயக்கிய விக்ரம் படம் நான் ஒரு கோடியை தாண்டி வசூல் செய்து தற்போது வரை வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த படங்கள் தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக மீண்டும் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தை இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

விக்ரம் படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக 25 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் இணையத்தில் வைரலாக இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்துக்கு நான்கு கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்கினார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj Salary for Thalapathy67 Movie
Lokesh Kanagaraj Salary for Thalapathy67 Movie