தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் வெளியான டாக்டர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பாராதவிதமாக பெரும் சரிவை சந்தித்தது.
இந்தப் படத்தால் நெட்டிசன்கள் பலரும் நெல்சனை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் சகஜம் அப்படி இருக்கையில் ஒரு படம் தோல்வி அடைந்ததற்காக ஒருவரை இப்படி தாக்கக் கூடாது என சமூக வலைதளங்களில் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெல்சனுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஒருவர் வெற்றி அடையும்போது கொண்டாடும் நாம் அவர் தோல்வியடையும் போது இப்படி உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் அளவிற்கு விமர்சனங்கள் செய்யக்கூடாது. வெற்றி, தோல்வி என்பது சகஜம். நாளை இதே நிலை எனக்கும் வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.