Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

LCU-ஐ மையமாக வைத்து குறும்படம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj will make a short film based on LCU

இளம் இயக்குனர் பட்டியலில் மறுக்க முடியாத இடத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து அவர் இயக்கிய “லியோ” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஹோலிவுட் படத்தில் வரும் மார்வல் யூனிவர்ஸ், டி.சி. காமிக்கலில் வரும் யூனிவர்ஸ் கான்சப்ட்டுகளைப் போல, தனக்கென்று ஒரு தனி ஸ்டைலாக லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸ் ( LCU) என்று ஒன்றை உருவாக்கினார். அதில் விக்ரம், லியோ, கைதி போன்ற படங்கள் உள்ளடக்கம். லியோ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.

அதை தொடர்ந்து கைதி- 2 எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வந்த அண்மை தகவல்கள்படி லோகேஷ் கனகராஜ் LCU வை மையமாக வைத்து 15- 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார். அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார். குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் கைதி – 2 படத்திற்கு முன்னே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.