கோலிவுட் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் மும்பரமாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல நடிகரும் அமைச்சருமாக பணியாற்றி வரும் உதயநிதியுடன் இணைந்து கிரிக்கெட்டை கண்டு களித்திருக்கிறார்.
அதாவது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் CSK vs RR அணிகள் போட்டியிடும் ஐபிஎல் விளையாட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சதீஷ் மூவரும் இணைந்து கண்டு களித்துள்ளனர். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#LokeshKanagaraj – Udhaynidhi Stalin – Sathish at Chepauk #CSKvsRR match..🔥 pic.twitter.com/fF1vFjKNqk
— Laxmi Kanth (@iammoviebuff007) April 12, 2023