தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இதைத்தொடர்ந்து இவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்து வந்தார். இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு காதலை மறந்து அவரவர் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய பள்ளி பருவத் தோழி மோனிகா என்பவரை காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இப்படியான நிலையில் லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நெஞ்செல்லாம் காதல் என்ற பாடலை ஒலிக்க விட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கவின் கல்யாணத்துக்கு லாஸ்லியா ரியாக்சன் இது தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.