Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லவ் டுடே படத்திலிருந்து வெளியான குட்டி மாமா பாடல். வீடியோ வைரல்

love-today-mamakutty-song-video-released update

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் லவ் டுடே. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்த “மாமா குட்டி” பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இதனை கண்டு களித்து வருகின்றனர்.