தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஆட்டோ டிரைவராக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். முதல் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது வரை நாற்பது கோடி ரூபாய் வரை வசூல் செய்து வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை இவானா ரசிகர்களுக்கும், பட குழுவினருக்கும் தனது நன்றியை கூறி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நீங்கள் கொடுக்கும் அன்பும், சமூக வலைத்தளங்களில் எடிட் செய்து பதிவிடும் வீடியோ என எல்லாத்தையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் நிகிதாவ லவ் பண்ணதுக்கு ரொம்ப நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.