தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் இதன் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இப்படம் நூறு நாட்களைக் கடந்து வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக்காக உள்ளது.
அதன்படி இப்படத்தின் இந்தி ரீமேக்கை பாந்தோம் ஃபிலிம்ஸ் (Phantom Films) உடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் & தயாரிப்பாளர் போனி கபூரின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#LoveToday Hindi remake on cards. Amir Khan’s son Junaid Khan & Jhanvi Kapoor’s sister Khushi Kapoor are expected to cast as lead pair. pic.twitter.com/cubhxHNAst
— Cinema Madness 24*7 (@CinemaMadness24) March 25, 2023