Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லவ் டுடே படத்திலிருந்து வெளியான சாச்சிட்டாலே பாடலின் வீடியோ இதோ.!!

love today movie saachitale song video released

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் லவ் டுடே.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் எழுதி யுவன் பாடியுள்ள “சாச்சிட்டாலே” என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.