தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் லவ் டுடே.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகியதை தொடர்ந்து இந்த திரைப்படம் டிசம்பர் இரண்டாம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
