8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள், குட் நைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘லவ்வர்’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.லவ்வர் போஸ்டர்இந்நிலையில், ‘லவ்வர்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
#Lover is definitely for yo‘U A’ll ❤️❤️
Releasing in theatres on February 9th. pic.twitter.com/7dMNDFomPC— Manikandan Kabali (@Manikabali87) February 7, 2024