Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தின் பெயருக்கு அர்த்தம் சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நிறுவனம்.. வைரலாகும் ட்வீட்

Lyca About Meaning of Thala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். நடிப்பில் தற்போது ajith 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். அந்த நிலையில் அஜித் குமார் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர்.

லைக்கா நிறுவனமும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பிறந்தநாள் வாழ்த்து குறிப்பில் தலை என்ற பெயருக்கு புது அர்த்தத்தையும் கூறியுள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.