Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை மாற்றிய படக்குழு, புதிய தலைப்பு இதுதான், வைரலாகும் பதிவு

Ma.Po.Si Movie Tittle Change Latest Update

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெற்றிமாறன் ரிலீஸ் செய்யவுள்ள மா.பொ.சி படத்தின் டைட்டில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால்

பத்திரிக்கை ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம்.

எங்களது SSS Pictures தயாரிப்பில், வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான, “மா.பொ.சி.” திரைப்படதிற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், சார் என்ற என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம்.

அன்பு பத்திரிகை ஊடகத்துறை நண்பர்கள், உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்க கேட்டுக் கொள்கிறோம்.

படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.