தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இதில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் வகையில் மாமன்னன் படக்குழு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.