கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாமன்னன்”. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இதில் நடிகர் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தில் மிரட்டலான லுக்கில் இருக்கும் வடிவேலு மற்றும் உதயநிதியின் புதிய hd புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
#Maamannan pic.twitter.com/z6GMlQEvZo
— Karthik Ravivarma (@Karthikravivarm) May 9, 2023
Vadivelu and Udhaynidhi Stalin from #Maamannan. This is going to be a very interesting film. pic.twitter.com/ugxQNoFiHN
— Siddarth Srinivas (@sidhuwrites) May 9, 2023