Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன்னன் வெற்றி விழா.!! புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்ட படக்குழு

maamannan movie success meet celebration photos update

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘மாமன்னன்’.

வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் ஆகியோரின் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படம் தொடர்ச்சியாக பாராட்டுகளை குவித்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றியை நிகழ்ச்சியாக நடத்தி படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி உள்ளனர்.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘மாமன்னன் குழுவினரின் ஆரவாரங்களும், பாராட்டுக்களும் நிறைந்த நாள் இது எனக் குறிப்பிட்டு படத்தின் வெற்றியைப் பற்றி பேச மொத்த குழுவும் கூடி, நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவு அளித்த ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் அத்துடன் அந்நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.