Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன்னன் திரைப்படத்தை பார்த்த ஐஐடி மாணவர்கள் பாராட்டு.! வைரலாகும் வீடியோ

maamannan movie team recent update

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து முக்கிய இயக்குனராக விளங்கிவரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருந்த மாமன்னன் திரைப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தை பாராட்டி பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இப்படம் வருகின்ற ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்த ஐஐடி மாணவர்கள் பாராட்டியதாக படக்குழு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. மேலும் அதில், ஐஐடி மாணவர்களின் பாராட்டு மழையில் மாமன்னன்! 4வது வார வெற்றியில் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.