வெங்கட் பிரபு சென்னை 28 படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்துள்ள முதல் திரைப்படம் இது.
அதுவே ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. பின் படம் தொடங்க ஆரம்பித்ததில் இருந்து ரிலீஸ் செய்யப்போகும் முந்தைய நாள் வரை படக்குழு நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டார்கள்.
இப்போது படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாம். உலகம் முழுவதும் ரூ. 50 கோடி தாண்டி படம் வசூலித்து வருகிறது.
வரும் நாட்களில் எந்த ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் இல்லை என்பதால் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.