Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Maanaadu film will be a milestone for Simbu - Producer Suresh Kamatchi

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெங்கட் பிரபுவோடு கலந்துரையாடும் போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நான் பார்த்தவரைக்கும் மாநாடு படம் சிம்புவுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.