தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுகிறது.
அதைப்பார்க்கும் போது சினிமா துறையினருக்கு படு கொண்டாட்டமாக உள்ளது. ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவந்த நிலையில் தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
இந்த மாநாடு திரைப்படம் தொடங்குவதற்கே பெரிய பிரச்சனைகளை படக்குழு சந்தித்துள்ளார்கள். அதெல்லாம் நமக்கும் தெரிந்த விஷயம், ரிலீஸிற்கு முன்தினம் கூட படம் வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகம்.
ஒருவழியாக எல்லா தடைகளையும் தாண்டி படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
அதேபோல் வசூலிலும் படம் அதிரடி கலெக்ஷன் செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாள் முடிவில் மட்டும் மாநாடு படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.