Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது – தயாரிப்பாளர் அறிவிப்பு

Maanaadu first single release postponed

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்னொரு தேதியில் அப்பாடலை வெளியிடுவோம் என கூறியுள்ள அவர், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.