Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் மாநாடு சூட்டிங் எப்போது?? எதிர்பாராத நேரத்தில் அதிரடியான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் – ரசிகர்கள் உற்சாகம்.!!

Maanaadu Movie Launch Stills

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தோட்டக்கலை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பாரதிராஜா, ஆர்கே சுரேஷ், எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் சூட்டிங் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என அறிவித்துள்ளார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாக நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.