Tamilstar
News Tamil News

அவங்க கிரீன் சிக்னல் கொடுத்தா மாநாடு தொடங்கும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது.

சுமார் ஒரு மாதம் விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது.

இருப்பினும் சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் படத்தைப் பற்றிய அப்டேட் தருமாறு தயாரிப்பாளரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எல்லோரும் மாநாடு படத்தின் அப்டேட் என்ன என்று கேட்கிறார்கள்.

அரசாங்கத்தின் கிரீன் சிக்னலுக்காக திரையுலகத்தினர் காத்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் உடனடியாக படப்பிடிப்பை ஆரம்பிப்போம்,” என தெரிவித்துள்ளார்.