தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர்.
இதுவரை மூன்று படங்களை மட்டுமே இயக்கி உள்ள மாரி செல்வராஜ் அடுத்ததாக தன்னுடைய நான்காவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. மாரி செல்வராஜ் நான்காவது படமாக வெளியாக உள்ள இந்த படத்தை அவரும் அவருடைய மனைவியும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு வாழை என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக்கி வைரலாகி வருகிறது.
M4
வாழை 🦋 pic.twitter.com/1hqkdvjne1— Mari Selvaraj (@mari_selvaraj) November 21, 2022