தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக ‘வாழை’ திரைப்படத்தை இயக்கவுன்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. மாரி செல்வராஜின் நான்காவது படமாக வெளியாக உள்ள இந்த படத்தை அவரும் அவருடைய மனைவியும் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார். இதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.