மாருதம் பட டிரைலரை பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் திடீரென பரவ தொடங்கிய கொரானா வைரஸ் தொற்று காரணமாக பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேக்கம் அடைய தொடங்கின.
தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் படங்களும் வெளியாக தொடங்கியுள்ளது.
அந்த வகையில் பவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக சதா முருகன், எம் முருகன் ஆகியோரின் தயாரிப்பில் இளமாறன் என்பவர் எழுதி இயக்கி உள்ள திரைப்படம் மாருதம்.
இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் பாக்யராஜ் இன்று வெளியிட்டுள்ளார்.