Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கள். வீடியோ வைரல்

maaveeran-first-single-out-now

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மண்டேலா திரைப்படத்தை இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளத்துடன் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “சீன்னா சீன்னா” என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பரத் ஷங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்பாடலை அனைவரது ஃபேவரிட் பாடகரான இசையமைப்பாளர் அனிருத் பாடி அசத்தியிருக்கிறார். தற்போது இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.