தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இவர் அதன் பிறகு தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார்.
தொடர்ந்து உலகநாயகன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தை இயக்கிய இவர் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர் கமலை பற்றி யார் பேசினாலும் சும்மா இருக்க மாட்டார் என சட்டையை கிழிச்சுகிட்டு சண்டைக்கு போயிடுவார், பலமுறை நாங்க அவரை பிடித்து இழுத்துட்டு வந்திருக்கும் என மாவீரன் படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் வெறித்தனமான #கமல் சார் ரசிகன் அவர பத்தி ஏதாவது பேசிட்டா போதும் அடிதடி சண்டையெல்லாம் போட்டு பிளேட்லாம் பறக்கும் நாங்க புடிச்சி இழுத்துட்டு வருவோம், கமல் சார் பத்தி தப்பா பேசுனா அவனுக்கு பொருக்காது எப்படிடா அவன் பேசலாம்னு சொல்லுவான் – இயக்குனர் @madonneashwin🔥@Dir_Lokesh pic.twitter.com/CWt8zr3WWm
— SundaR KamaL (@Kamaladdict7) July 13, 2023